திருவணந்தபுரம், பிப் 18 – ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் நன்கு உழைத்த ஊழியருக்கு, அவரது வேலையைப் பாராட்டி அங்கீகார கடிதமோ அல்லது சம்பள உயர்வோ வழங்கப்படலாம் .
ஆனால், 22 ஆண்டுகள் பணியாற்றி நிறுவனத்தின் உயர்வுக்கு காரணமாக இருந்த தனது ஊழியருக்கு Mercedes Benz காரை பரிசளித்து அதிர்ச்சியில் திளைக்க வைத்திருக்கின்றார் கேரளாவைச் சேர்ந்த முதலாளி.
மகிழச்சியாகவும், மனநிறைவாகவும் இருக்கும் ஊழியர்களே, வர்த்தகத்தில் வெற்றிக்கான ரகசியம் என, ஊழியருக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்திருக்கும் myG நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஏ. கே ஷாஜி கூறியுள்ளார்.