Latestமலேசியா

மெர்டெக்கா சிந்தனையும் தேசிய உணர்வும், நாடெங்கும் பிரதிபலிக்கட்டும் – விக்னேஸ்வரன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 – 67வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வேளையில், நாட்டு மக்கள் அனைவரின் உள்ளத்திலும் மெர்டேக்கா சிந்தனையும் தேசிய உணர்வும் மேலோங்கட்டும் என்று, மஇகா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.

மெர்டேக்கா தினத்தைக் கொண்டாடுவதில் மற்ற அரசியல் கட்சிகளைக் காட்டிலும் மஇகாவிற்கு ஒரு சிறப்பான பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் மூத்த அரசியல் இயக்கம் என்பது மட்டுமல்ல; இந்த மண்ணில் ஆதிக்கம் கொண்டிருந்த அந்நிய ஆட்சியிலிருந்து, மெர்டேக்கா முழக்கம் எழும் வரை வித்திட்ட இயக்கம் மஇகாதான்.

அத்தகைய பாரம்பரிய வரலாற்று அரசியல் கட்சியை வழிநடத்தும் வாய்ப்பை அளித்த சமூகத்திற்கு அவர், நன்றி பாராட்டினார்.

அரசியல் பயணத்தில் முன்னடைவும் பின்னடைவும் மாறிமாறி வந்தாலும் தடம் மாறாமல் தேசிய நீரோட்டத்தில் தன்னை முழுவதுமாக முக்கியப்படுத்திக் கொண்டு, மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார-கல்வி மறுமலர்ச்சிக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் பேரியக்கம் மஇகா என்றார், விக்கினேஸ்வரன்.

இதனிடையே, பல இன மக்கள் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் மலேசியாவில் வாழ்வதற்கு, அரசியல் நிலைத்தன்மையும் ஒரு காரணம்.

இதன் தொடர்பில், நம் முன்னோர்கள் வகுத்தளித்துள்ள பாதையில் பயணிக்கும் இன்றைய தலைவர்கள், ஆட்சியாளர்கள், குறிப்பாக இன்றைய ஒற்றுமை-மடானி அரசை வழிநடத்தும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட தலைவர்கள் அனைவருக்கும் இந்த 67-ஆவது தேசிய தினத்தில், மஇகா சார்பில் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!