
மெர்டேக்கா 118 கோபுரத்தின் பாதுகாப்பு குறித்து, மக்கள் கேள்வி எழுப்பப் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சமூக ஊடகங்களில் அது தொடர்பான விவாதங்கள் சூடு பிடித்துள்ளன.
கடந்தாண்டு டிசம்பரில், உலகின் இரண்டாவது உயரிய கட்டடமாக திகழும் மெர்டேக்கா 118 கோபுரத்தில், ரஷியாவை சேர்ந்த Ivan Beerkus-சும், Angela Nikolau-வும் அத்துமீறி நுழைந்து அதன் உச்சியை சென்றடைந்ததோடு, அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெளிதரப்பினர் எளிதாக நுழையும் அளவிற்கு, மெர்டேக்கா கோபுரத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் தரப்பினர் மெத்தனமாக இருந்தார்களா ? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல், குத்தகை பணியாளரைப் போல உடையணிந்து, அந்த கோபுரத்தை ஏறிய அனுபவத்தை Angela நேற்று பகிர்ந்திருந்தது, மலேசியர்களின் சினத்தை மேலோங்கச் செய்துள்ளது.
அச்சம்பவம் தொடர்பில், அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கைகாக தற்சமயம் மலேசியர்கள் மிகுந்த எதிர்பார்புடன் காத்திருக்கின்றனர்.
அந்த அத்துமீறல் தொடர்பில், முழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுதியோன் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதே சமயம், அவ்விவகாரம் தொடர்பில் பதிவை வெளியிட்ட, சமூக ஊடக பயனரை கண்டறிய தொடர்பு பல்லூடக ஆணையத்துடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தேசிய போலீஸ் படைத் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் நீர் டெல்லான் யாஹாயா கூறியுள்ளார்.
எனினும், அவ்விவகாரம் தொடர்பில், ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கு கடைப்பிடிக்கப்பட கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.