
மெர்டேக்கா 118 கோபுரத்தில் அத்துமீறி ஏறிய ஆடவர் கும்பல் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக, நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு விட்டதாக, PNB Merdeka Ventures நிறுவனம் தெரிவித்தது.
கடந்தாண்டு மே மாதம் முதலாம் தேதி, மெர்டேக்கா கோபுரத்தில் அத்துமீறி ஏறியதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அனுமதி இன்றி மெர்டேக்கா 118 கோபுரத்தின் உச்சிவரை செல்வது சட்டத்துக்கு புறப்பானது, ஆபாத்தானது. அந்நடவடிக்கை அங்குள்ள இதர பணியாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அதனால் அதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாக கருதப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
மலேசியாவின் மிக உயரிய மெர்டேக்கா 118 கோபுரத்தை, Driftershoots எனப்படும் யூதியூபர்கள் ஏறியது தொடர்பான ஏழு நிமிட காணொளி ஒன்று பரவலாக பகிரப்படும் சம்பவம் தொடர்பில், நேற்று ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.