
கோலாலம்பூர், டிச 29 – Merdeka 118 வானுயர் கட்டட உச்சியின் மீது அனுமதியின்றி ஏறியதற்காக, ரஷ்ய ஜோடியினரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த ஜோடியினர் வாக்குமூலம் அளிக்க விரைவில் அழைக்கப்படுவார்கள் என கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் Datuk Yahaya Othman தெரிவித்தார். அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவ்விருவரும் விசாரிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக அந்த இரு ரஷ்ய நாட்டவர்களும் உலகின் இரண்டாவது உயரமான அந்த கட்டடத்தில் ஏறி நின்ற புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து, அக்கட்டடத்தின் பாதுகாப்பு அம்சம் குறித்து மலேசியர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.