Latestமலேசியா

மெலோர்  சட்டமன்ற இடைத் தேர்தல் ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், மே 4 – கிளந்தான் மெலோர் சட்டமன்றத் தொகுதி காலியாகியிருப்பதாக, கிளந்தான் மாநில சட்டமன்ற அவைத் தலைவரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை, மலேசிய தேர்தல்  ஆணையம் பெற்றுள்ளது.

அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட 60 நாட்களுக்குள்  தேர்தல் நடத்தப்பட்டு புதிய மக்கள் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட  வேண்டும்.

ஆனால், நாட்டில் 2021 அவசர காலச் சட்டம்  அமலில் இருப்பதை அடுத்து,  N.23 மெலோர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக, தேர்தல் ஆணைய  செயலாளர்  டத்தோ இக்மல்ரூடின் இஷாக் (Datuk Ikmalrudin Ishak ) ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, மெலோர் சட்டமன்ற உறுப்பினர் டாக்ட மட் யுஸ்னான் (Dr Md Yusnan), மாரடைப்பு காரணமாக கெத்தெரேவிலுள்ள அவரது வீட்டில் காலமானார்.

கடந்த 14 -வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட  மட் யுஸ்னான் ,  647 பெரும்பான்மை வாக்குகளில் ,  தேசிய முன்னணி வேட்பாளரைத் தோற்கடித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!