
மெல்பர்ன், செப் 25 – ஒரு சமூகத்தின் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பது நாம் பிறந்து வளர்ந்த தாய் நாட்டில் கட்டிக் காப்பதும், வளர்ப்பதும் பெரிய விஷயம் அல்ல. ஆனால் எங்குச் சென்றாலும் அதனை விட்டுக் கொடுக்காமல் கட்டிக் காப்பதே அரிய காரியம்.
அப்படி ஒரு அரிய காரியத்தை ஒவ்வொரு வருடமும் செய்து வருகின்றது மெல்பர்ன் மலேசிய இந்தியர் கலாச்சார சங்கம். தொடக்கத்தில் மலேசிய இந்தியர்களை மட்டும் ஒன்றிணைப்பதாக இருந்த இந்த நிகழ்ச்சி, தற்போது இந்தியா, ஶ்ரீ லங்கா இந்தியர்களை உள்ளடக்கியிருப்பதோடு, மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் அல்லாதவர்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அந்த வகையில், இந்த வருடமும் மிக குதுகலமான வகையில் அண்மையில் நடைப்பெற்றது இவர்களின் ஆட்டம் பாட்டம் கோலாட்டம் கலாச்சார நிகழ்வு.
இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி வருடம் தோரும் ஆவலாக காத்திருந்து தங்களுடைய ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணன் மெல்பரின்ல் குடியேறி இருக்கின்ற பலரிடம் காண முடிகிறது.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வின் கூடுதல் அம்சம் என்னவென்றால், தங்களின் வீடுகளில் சமைத்த உணவுகளை அனைவரும் இங்கு கொண்டு வந்து அன்பாக பறிமாறி ருசிபார்த்து அனுபவிப்பதே
தங்களது தாய்நாட்டின் கலை, கலாச்சாரம், பெருமை ஆகியவற்றை எங்கு சென்றாலும் அதனை தொடர்ந்து வளர்க்கும் எண்ணத்தோடு செய்யப்படும் இது போன்ற ஒன்றுகூடல்கள் என்றும் வரவேற்கக்கூடியது. இது புதிய உறவுகளை வளர்க்க பங்காற்றுவதோடு புதிய தலைமுறை மத்தியிலும் தங்களது வேர்களை தெரிய வைக்க சிறந்த ஒரு அடித்தளமாக விளங்குகிறது என்பது திண்ணம்.