
கத்தாரில், உலக கிண்ண காற்பந்தாட்டத்தின் போது, லியோனல் மெஸ்சி தங்கியிருந்த தங்கும் விடுதி அறை அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. அர்ஜெண்டினா மூன்றாவது முறையாக உலக கிண்ணத்தை வெல்ல, 35 வயது மெஸ்சியே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 1986-ஆம் ஆண்டுக்கு பின்னர் அர்ஜெண்டினா உலக கிண்ணத்தை வென்றிருப்பதும் இதுவே முதல் முறையாகும்.
அதே சமயம், கத்தார் உலக கிண்ண ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அர்ஜெண்டினா அணியின் கேப்டனுக்கு, சிறந்த ஆட்டக்காரர் எனும் அங்கீகாரமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. உலக கிண்ண காற்பந்தாட்டதின், குழு நிலையிலான ஆட்டம், 16 அணிகளுக்கு இடையிலான ஆட்டம், காலிறுதி, அரையிறுதி, இறுதியாட்டம் என அனைத்து ஆட்டங்களின் போதும் கோல் புகுத்திய முதல் ஆட்டக்காரராக மெஸ்சி திகழ்கிறார்.