மெஸ்ஸியின் 2022 ஆண்டு உலக கிண்ண ஜெர்சி ஏலத்திற்கு விடப்படும்

நியூயார்க், நவ 20 – அர்ஜென்டினாவின் 2022 உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் லியோனல் மெஸ்ஸி கலந்துகொண்ட ஆட்டங்கள் மற்றும் இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினாவுக்கு வெற்றியை தேடித் தந்தபோது அணிந்திருந்த ஆறு ஜெர்சிகளின் தொகுப்பு டிசம்பரில் ஏலம் விடப்படும் என்று ‘Sotheby’s’ நிறுவனம் திங்களன்று அறிவித்தது, அவற்றின் மதிப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியா மற்றும் மெக்ஸிகோவிற்கு எதிரான குழு-நிலை சுற்றுகளின் முதல் பாதிகளிலும், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டங்களிலும் – மற்றும் பிரான்சுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் லியோனல் மெஸ்ஸி இந்த ஜெர்சிகளை அணிந்திருந்தார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற நான்கு உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் அர்ஜெண்டினாவுக்கு வெற்றியை பெற்றுத்தருவதற்கு தவறிய லியோனல் மெஸ்ஸி கடந்த ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஜெர்சிகள் உண்மையில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வாங்கினால், அது இதுவரை ஏலம் விடப்பட்ட விளையாட்டு நினைவுச் சின்னங்களின் மிகவும் மதிப்புமிக்க விற்பனையாக இருக்கக்கூடும் என ‘Sotheby’s’ தெரிவித்தது.