Latestமலேசியா

மேடை ஏறுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன் தந்தை இறந்த செய்தி; கேட்டு மனமுடைந்த பட்டதாரி உருக்கம்

குவாலா நெருஸ், நவம்பர் 7 – இளங்கலைப் பட்டம் பெறுவதற்கான முறைக்காக காத்திருந்த பட்டதாரி ஒருவரின் மகிழ்ச்சி சோகத்தில் முடிந்தது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை இறந்தவிட்ட செய்தி தான் அது.

23 வயது ஹஸ்லினா காலாங்கிற்கு, நேற்று காலை, UniSZA – திரங்கானு சுல்தான் ஜைனால் அபிடின் பல்கலைக்கழகத்தில், பட்டத்தை பெற்றுக் கொள்வதற்காக, மேடை ஏற காத்திருந்த போது, அண்டை வீட்டுக்காரரிடமிருந்து அந்த துயரச் செய்தி கிடைத்தது.

அதனால், பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, தனது 24 வயது சகோதரியுடன், சபா, தாவாவ்விலிருந்து, குவாலா திரங்கானுக்கு வந்திருந்த அவர் நேற்று மாலையே உடனடியாக வீடு திரும்பினார்.

ஹஸ்லினா தந்தையின் இறப்பு செய்தியால், பட்டமளிப்பு மண்டபத்தை சற்று நேரம் சோகமான சூழல் சூழ்ந்தது. அவரை பல்கலைக்கழகத்தின் தொடர்பு நிர்வாக மற்றும் தகவல் வர்த்தக பிரிவு இயக்குனர் ஆராத் தழுவி ஆறுதல் கூறியுள்ளார்.

தனது சந்தோஷமாக தருணத்தை பகிர்ந்து கொள்ள, தந்தை உடன் இல்லை எனும் வருத்தத்தை ஹஸ்லினா வெளிப்படுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!