Latestமலேசியா

மேம்பாட்டு நிதி முறைகேடு ; 2 மூத்த உயர் அதிகாரிகளை எம்.ஏ.சி.சி கைது செய்தது

கோலாலம்பூர், மே 15 – நிதியமைச்சிலிருந்து நிதி முறைகேட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் அரசு சார்பு நிறுவனத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை MACC கைது செய்துள்ளது. 50 வயதுடைய அந்த இருவரும் அமைச்சின் 1.2 பில்லியன் ரிங்கிட் நிதியின் ஒரு பகுதியை மேம்பாட்டு செலவுக்கு தொடர்பில்லாத நோக்கங்களுக்கான குத்தகையாளர்கள் மற்றும் பேச்சுக்களில் ஈடுபட்டவர்களுக்கு பரிமாற்றம் செய்ததாக நம்பப்படுகிறது.

அரசாங்க ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட நிதிகளில் முறையீட்டில் ஈடுபடுவது கடுமையான ஒன்றாக கருதப்படுவதாக MACC க்கு நெருக்கமான தகவல்கள் மூலம் தெரியவருகிறது. கைது செய்யப்பட்ட அந்த இரண்டு சந்தேக நபர்கள் விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதை MACC யின் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குநர் Hishamuddin Hashim உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!