
பெங்களூரு, ஜன 25 – ஆகாயத்திலிருந்து பண மழை கொட்டும் என பலர் நகைச்சுவையாக கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே பெங்களூரில் ஒரு மேம்பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் கட்டு கட்டுகளாக பண நோட்டுக்களை எடுத்து கீழே வீசியதால் அதனை எடுப்பதற்கு பொதுமக்கள் விரைந்தனர். சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே விழுந்த பண நோட்டுக்களை எடுப்பதற்கு திரண்டதால் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. கருப்பு நிற ஆடை அணிந்த ஆடவர் ஒருவர் தமது பேக்கிலிருந்து பணத்தை எடுத்து வீசும் காணொளியும் சமூக வலைத்தலத்தில் வைரலானது. இந்த தகவலை அறிந்து அந்த ஆடவரை கைது செய்வதற்காக போலீசார் வந்தபோது அதனை அறிந்து அவர் தலைமறைவாகிவிட்டார்.