
அம்பாங் ஜெயா, செப் 25 – தான் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததால், மேம்பாலத்திலிருந்து 20 அடி கீழே தூக்கி எறியப்பட்ட மாணவன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினான்.
இச்சம்பவம் நேற்று மாலை ஹுலு கிள்ளான் நெடுஞ்சாலை அருகே நிகழ்ந்துள்ளது.
சாலையில் யு-டர்ன் செய்யும் பொது மோட்டார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலை தடுப்பில் மோதியதாக அம்பாங் ஜெயா துணை ஆணையர் முஹம்மட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
கீழே விழுந்த அம்மாணவனுக்கு கால் எலும்பு, முதுகுத்தண்டு மற்றும் விலா எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் உடல் நலம் தேறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.