Latestமலேசியா

தாபோங் ஹாஜியில் 30,000 ரிங்கிட் சேமிப்பு மாயம் – முன்னாள் அரசு அதிகாரி ஏமாற்றம்

கோலாலம்பூர், மார்ச் 7 – Tabung Haji எனப்படும் யாத்திரிக நிதி நிர்வாக வாரியத்தில் இருந்த தனது சேமிப்பு தொகையான 30 ,000 ரிங்கிட் மாயமாய் மறைந்ததாக அரசாங்கத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி ஒருவர் ஏமாற்றத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகியுள்ளார். தமது சேமிப்புக் கணக்கிலிருந்த பணம் வேறு ஒருவரின் கணக்கிற்கு மாற்றப்பட்டதோடு 2018 ஆம் ஆண்டு முதல் அந்த பணம் ஏ.டி.எம் இயந்திரன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் காணமால்போனதை கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதியன்றுதான் தமக்கு தெரியவந்ததாக 66 வயதுடைய Jabidah Monseri தெரிவித்தார். தேசிய போதைப் பொருள் துடைத்தொழிப்பு நிறுவனத்தில் துணை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து 2017 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற பின் சரவா மலேசிய பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமான Unimas Holding ஸின் தலைவர் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து புதிய வேலை பளுவினால் நீண்ட நாட்களாக Tabung Haji சேமிப்பை கணக்கை அவர் புதுப்பிக்கவில்லை. மேலும் Tabung Haji சேமிப்பில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் Tabung Haji சேமிப்பு புத்தகம் வீட்டில் கையில் கிடைத்தவுடன் திடீரென சேமிப்பு தொகையை பரிசோதிக்க சென்ற பிறகுதான் தமது சேமிப்பு கணக்கில் இருந்த பணம் மாயமானது குறித்து அதிர்ச்சிக்கு உள்ளானதாக Jabidah வேதனையோடு தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ம்ஆம் தேதி தொடங்கி 30 முறை தமது சேப்பிலிருந்து பணம் மீட்கப்பட்டுள்ளது. Tabung Haji யிலிருந்து பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதோடு ஏ.டி.எம் இயந்திரத்திலிருந்து அப்பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து Tabung Haji யில் தாம் புகார் செய்து 3 மாதங்களாகிவிட்ட போதிலும் உருப்படியான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லையென Jabidah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!