
பிரசல்ஸ் , நவ 3 – மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சியாரன் புயலினால் மேற்கு ஐரோப்பாவில் எழுவர் மரணம் அடைந்தனர். பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டதோடு பெரிய அளவில் போக்குவரத்து வசதிகளும் பாதிக்கப்பட்டன. பெல்ஜியன் நகரான கென்ட்டில் மரக்கிளைகள் விழுந்ததில் 64 வயது பெண்மணியும் 5 வயது சிறுவனும் இறந்தனர். இதற்கு முன்னதாக லோரி மீது மரம் விழுந்ததில் அதன் ஓட்டுனர் இறந்தார். பிரான்ஸ்சின் லே ஹவ்ரே துறைமுக நகரில் தமது வீட்டின் முற்றத்திலிருந்து கீழே விழுந்த ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். ஹாலந்துந்தின் வென்ரே நகர், மத்திய மெட்ரிட் நகர் மற்றும் ஜெர்மனியிலும் புயலின் காரணமாக மூவர் மரணம் அடைந்தனர். பிரான்சில் புயல் காரணமா சுமார் ஏழு லட்சம் வீடுகளில் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டது. புயலினால் 10 லடசத்தற்கு மேற்பட்ட மக்கள் கைதொலைபேசி தொடர்பு இணைப்பு சேவையை இழந்தனர்.