ஜகார்த்தா, பிப் 25 – மேற்கு சுமத்ராவில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கிலும் உயரமான கட்டிடங்களில் அதிர்வை உணர முடிந்தது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை மணி 8.39க்கு ( மலேசிய நேரம் காலை மணி 9.39 ) அளவில் இந்தோனேசியா, புக்கிட் திங்கிக்கு அருகே ரெக்டர் கருவியில் 6.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலைத்துறை அறிவித்தது.
எனினும் சுனாமி அபாயம் எதுவும் வெளியிடப்படவில்லை. கிள்ளான் பள்ளத்தாக்கில் கோலாலம்பூர், போர்ட் கிள்ளான் மற்றும் சைபர் ஜெயாவில் நில நடுக்கத்தின் அதிர்வை மலேசியர்கள் உணர்ந்தனர்.
பலர் தங்களது கட்டிடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி கீழ்த்தளத்தில் கூடினர்.
பல மலேசியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டனர்.