
கோலாலம்பூர், நவ 9 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு மேலும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் என துணைப்பிரதமர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். இதுவரை பெர்சத்து கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் அவர்கள் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து வருகின்றனர். பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த அந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நல்லெண்ண அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக ஸாஹிட் ஹமிடி கூறினார்.
இதுவரை பெர்சத்து கட்சியின் ஜெலி நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தஜஹாரி கெச்சிக், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் அஸிஸி அபு நைம், லாபுவான் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைலி அப்துல் ரஹ்மான் மற்றும் கோலாகங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட் ஆகியோர் தங்களது தொகுதி மக்களின் நலன்களுக்காக பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களில் ஏற்கனவே சுஹைலி மற்றும் இஸ்கண்டார் சுல்கர்னைன் பெர்சத்து கட்சியிலிருந்து முறையே ஆறு மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்,