Latestமலேசியா

மேலும் நான்கு நாட்களுக்கு டத்தோ ரோய் தடுத்து வைப்பு

கோலாலம்பூர், மார்ச் 17 –
Jana Wibawa தொர்பாக எம்.ஏ.சி.சியின் விசாரணையில் லஞ்ச ஊழலில் முக்கிய நபராக சந்தேகிக்கப்படும் டத்தோ ரோய் எனப்படும் Hussein Nasir ரை மேலும் நான்கு நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை எம்.ஏ.சி.சி பெற்றுள்ளது. உசேய்ன் நாசிரை ஏழு நாட்களுக்கு தடுத்துவைப்பதற்கு Maac கோரியது. எனினும் உசேய்னின் வழக்கறிஞர் இதற்கு ஆட்சேபித்தார். இதற்கு முன்னதாக இவ்வார தொடக்கத்தில் அவருக்கு எதிராக எம்.ஏ .சி.சி ஏற்கனவே மூன்று நாட்கள் தடுத்துவைக்கும் உத்தரவை பெற்றிருந்தது. அவருக்கு நேற்று போலீஸ் ஜாமின் வழங்கப்பட்டது. எனினும் விடுதலை செய்யப்பட்டபின் அவரை மீண்டும் எம்.ஏ.சி.சி கைது செய்தது. Jana Wibawa திட்டம் தொடர்பான விசாரணையை தடுப்பதற்காக நான்கு லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதற்காக எம்.ஏ.சி.சி அதிகாரி ஒருவர் உட்பட கைது செய்யப்பட்ட ஐவரில் உசேய்னும் அடங்குவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!