
புத்ரா ஜெயா, ஜன 16 – சபா மற்றும் சரவா தலைமை நீதிபதி Abang Iskandar Abang Hashim மேல் முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மலேசியாவிலிருந்து அந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் நீதிபதியாக அவர் திகழ்வார். மேலும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி Zabidin Diah மலாயா தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 63 வயதுடைய அபாங் இஸ்கந்தரும் 65 வயதுயை Zabidin னும் அந்த இரண்டு பதவிகளிலும் கடந்த நவம்பர் மாதம் இருந்து வருகின்றனர். அந்த இருவரும் நாளை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லாவிடமிருந்து நியமனக் கடிதங்கைளைப் பெற்றுக்கொண்டு பிற்பகலில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .
அதே வேளையில் கூட்டரசு நீதிமன்ற நீதிபதியான 63 வயதுடைய Abdul Rahman சபா மற்றும் சரவா தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருக்கிறார். அதோடு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி Nordin Hasan கூட்டரசு நீதிபதியாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்ற நீதபதிகளான Azman Abdullah, Azimah Omar, Collin Lawrence Sequerah, Zaini Mazlan, Wong Kian Keong மற்றும் Lim Chong Fong ஆகியோர் மேல் முறையீட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.