
பேங்காக் , மார்ச் 21 – தாய்லாந்து பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் தேதி நடைபெறும் . நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பின் தேர்தல் ஆணையத் தலைவர் Boonpracong இன்று இதனை அறிவித்தார். நடப்பு பிரதமர் Prayuth Chanocha தலைமையில் ராணுவ ஆதரவிலான மிதவாத அரசியல் கட்சிகளைக் கொண்ட கூட்டணிக்கு எதிராக பிரபல கோடிஸ்வரர் Shinawatra குடும்பத்தினர் தலைமையிலான Pheu Thai கட்சி தாய்லாந்து பொதுத் தேர்தலில் கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.