Latestஉலகம்சிங்கப்பூர்

மே 15, சிங்கப்பூர் பிரதமராக Lawrence Wong பதவியேற்பு

சிங்கப்பூர், ஏப் 15 – சிங்கப்பூர் தலைமைத்துவத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பதற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதமர்
Lee Hsien Loong கிடமிருந்து மே 15ஆம் தேதி Lawrence wong பிரதமர் பதவியை ஏற்கவிருக்கிறார். மே 15ஆம் தேதி பிரதமர் பதவி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. மே மாதம் 15 ஆம்தேதி பிரதமர் பதவியிலிருந்து Lee Hsien Loong விலகவிருக்கிறார். தமக்கு பதில் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் Lowrence Wong கை நியமிக்கும்படி அதிபருக்கு Lee Hisen Loong அதிகாரப்பூர்வமாக ஆலோசனை தெரிவிப்பார்.

தற்போது துணைப்பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருக்கும் Lorence Wong பிரதமராகுவதற்கு PAP எனப்படும் மக்கள் செயல் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதவை பெற்றுள்ளார். இவ்வாண்டு மே மாதம் 15ஆம் தேதி இரவு மணி 8 அளவில் இஸ்தானாவில் சிங்கப்பூரின் புதிய பிரதமராக Lorence wong பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார். 51 வயதுடைய Lorence Wong இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆளும் மக்கள் செயல் கட்சியின் நான்காவது தலைமுறைக் கொண்ட தலைவர்கள் குழுவினரால் PAP யின் தலைவராக பெயர் குறிப்பிடப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!