Latestஇந்தியா

மே 7ஆம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்கிறார்

சென்னை, மே 3 – தமிழக சட்டமன்ற தேர்தலில்  125 சட்டமன்ற தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையோடு திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவரான மு.க ஸ்டாலின்  இம்மாதம் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று   முதலமைச்சராக பதவி ஏற்கவிருக்கிறார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின்  கூட்டம் நாளை காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் மு.க ஸ்டாலினை  முதலமைச்சராக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்வார்கள்.

அதன்பிறகு  கவர்னர் மாளிகைக்கு செல்லும் மு.க ஸ்டாலின்  தமிழக கவர்னர்  பன்வாரிலால்  புரோகித்தை சந்தித்து  முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான  கடிதத்தை  வழங்குவார்.

இதனிடையே  தேர்தலில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று காலை முதல் அண்ணா  அறிவாலயத்தில் மு.க  ஸ்டாலினை  சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!