
கோலாலம்பூர், நவ 2 – MYAirline Sdn Bhd ட்டின் விமான சேவை லைசென்ஸ்சை உடனடியாக இடைநீக்கம் செய்வது என MAVCOM எனப்படும் மலேசிய விமான ஆணையம் முடிவு செய்துள்ளது. அக்டோபர் 13 ஆம் தேதி அந்த விமான நிறுவனத்திற்கு காரணம் கோரும் கடிதத்தை மலேசிய விமான ஆணையம் அனுப்பியதைத் தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி மைஏர்லைன்சின் பதில் கடிதம் எழுதியிருந்தது. எனினும் விளக்கம் கோரும் கடிதத்திற்கு மைஏர்லைன் தெரிவித்த பதில் திருப்தியளிக்காததால் அந்த விமான நிறுவனத்தின் விமான சேவை லைசென்ஸ்சை இடை நீக்கம் செய்வது என உடனடி முடிவு எடுக்கப்பட்டதாக Mavcom மின் நிர்வாகத் தலைவர் சரிபுடின் காசிம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.