மைக்ரேவேவ் சாதனத்தை மோப் துணியில் சுத்தப்படுத்துவதா ? 7 -Eleven மன்னிப்புக் கேட்டது

கோலாலம்பூர், ஜன 23 – Mop துடைப்பத்தைக் கொண்டு, உணவை சூடாக்கப் பயன்படுத்தப்படும் microwave oven –னைத் தனது கடை பணியாளர் ஒருவர் தூய்மைப்படுத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து, 7- Eleven நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. தங்களது நிலையங்களில் கடைப்பிடிக்கப்படும் உயர் தர தூய்மையை அந்த நடவடிக்கை பிரதிபலிக்கவில்லையென அந்த நிறுவனம் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட அந்த பணியாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இனிமேல் இப்படியொரு சம்பவம் நடைபெறாமால் இருப்பதை 24 மணி நேரமும் செயல்படும் தங்களது நிறுவனம் உறுதிப்படுத்துமெனவும் 7-Eleven குறிப்பிட்டது.
முன்னதாக, சமூக வலைத்தளத்தில் அதிக வைரலாகிய அந்த சம்பவம் கோலாலம்பூரில் உள்ள Kampung Attap – பில் உள்ள 7-Eleven கடையில் நிகழ்ந்ததாக தெரிய வந்துள்ளது.
இவ்வேளையில் , அந்த கடை பணியாளரின் செயல் , அருவருக்கத்தக்கது எனவும், இதுபோன்ற செயல்களை அனுமதிக்கவே கூடாது எனவும் வலைத்தளவாசிகள் பலரும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தனர்.