
கோலாலம்பூர், மார்ச் 13 – மைக்ரோசோப்ட் விண்டோஸ் 11- இன் புதிய பதிப்பில் முரசு அஞ்சல் விசைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன் புதிய பதிப்பில், நான்கு தேர்வுகளுக்கு இந்த விசைமுகம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்- இந்தியா, தமிழ்- இலங்கை, தமிழ் -மலேசியா, தமிழ் – சிங்கப்பூர் ஆகிய நான்கில் எதை தேர்வு செய்தாலும், அஞ்சல் விசைமுகத்தை தமிழ் உள்ளீடு முறையாக தேர்வு செய்யலாம் எனக் கூறுகிறார் முரசு அஞ்சல் செயலியையும்,விசைமுகத்தையும் உருவாக்கிய முத்து நெடுமாறன்.
இந்த விசைமுகம் ஐபோன், ஐபேட்களிலும் இயங்கி வருகிறது. ஆண்டிராய்டில் செல்லினம் செயலியின் மூலமாக இந்த விசைமுகத்தை கொண்டு உலகெங்கிலும் 2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தமிழில் தட்டெழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.