Latestமலேசியா

மினிமார்க்கெட்டில் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தும் ஆடவன்; வீடியோ வைரலாகி கண்டனங்கள் குவிகின்றன

கோலாலம்பூர், மார்ச் 31 – மினிமார்க்கெட் ஒன்றில் ஓர் ஆடவன் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தும் வீடியோ வைரலாகி, நெட்டிசன்களை கோபத்தில் குமுற வைத்துள்ளது.

22 வினாடி நீளம் கொண்ட அந்த வீடியோ பல்வேறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு, எதிர்பார்த்தபடியே இணையவாசிகளின் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

வீடியோவைப் பார்க்கும் போது, Allah வார்த்தைப் பொறிக்கப்பட்ட காலுறை சர்ச்சையில் சிக்கிய KK Supermart, Xin Jian Chang Sdn Bhd ஆகிய நிறுவனங்களின் சின்னம் தெரிகிறது.

அதோடு, “Cari pasal ya? என அவ்வாடவன் கேட்பதும் விளங்குகிறது.

ஏராளமானோர், அந்நபர் பிடிபட்டு, அவன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெட்டிசன்களில் ஒருவர், தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில், உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் ஆகியோரின் டிவிட்டர் (X) பக்கக்கங்களை tag செய்து, வீடியோவில் இருக்கும் ஆசாமியை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

இன்னொருவர், அக்கடையைப் புறக்கணிப்பது உனது உரிமை; ஆனால் அங்குள்ள பொருட்களை எல்லாம் சேதப்படுத்துவதற்கு உனக்கு உரிமை இல்லை; இது பாவபட்டச் செயல். இஸ்லாம் என்றுமே இதைப் போதித்ததில்லை என கருத்துத் தெரிவித்தார்.

எனினும், அந்த வீடியோவை டிக் டோக்கில் பதிவேற்றியவர் அதனை தற்போது நீக்கி விட்டதாகத் தெரிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!