கோலாலம்பூர், மார்ச் 1 – அருகில் இருக்கும் ஒருவருக்கு கோவிட் தொற்று கண்டுள்ளது என்பதை எச்சரிக்கைப் படுத்தும் வகையில் மைசெஜாத்ராவில் இடம்பெற்றிருந்த ‘Casual Contact’ எனும் அம்சம் இன்று முதல் அகற்றப்படுவதாக , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அதற்குப் பதிலாக அந்த செயலியின் மூலமாக தகவல் அனுப்பி அருகிலிப்பவர்களுக்கு கோவிட் தொற்று கண்டிருக்கும் விபரம் தெரிவிக்கப்படுமென்றாரவர்.
இவ்வேளையில், அந்த அம்சம் அகற்றப்பட்டிருந்தாலும், தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கும் பொது மக்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சுய கோவிட் பரிசோதனையை செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.