மணிலா, பிப் 14 – நாட்டின் கோவிட் தடுப்பூசிக்கான இலக்கவியல் சான்றிதழை, பிலிப்பின்ஸ் அதிகாரத்துவ தரப்பு அங்கீகரிக்க தவறியிருப்பதை அடுத்து, 13 மலேசியர்கள் மணிலா, நினோய் அகினோ ( Ninoy Aquino) அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு மலேசிய தூதரகம் உதவி செய்து வரும் வேளை அப்பிரச்னைக்கு தீர்வு காண, தமது தரப்பு பிலிப்பீன்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக, விஸ்மா புத்ரா தெரிவித்தது.
நேற்று கோலாலம்பூரிலிருந்து மணிலாவிற்கு பயணம் மேற்கொண்ட 15 பேர் கொண்ட குழுவில் 13 பேர், அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
மைசெஜாத்ராவில் உள்ள இலக்கவியக் சான்றிதழை, கோவிட் தடுப்பூசிக்கான ஆதாரமாக , அந்நாட்டு அதிகாரத்துவ தரப்பினர் ஏற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்து , அவர்கள் விமான நிலையத்திலேயே படுத்துறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.