Latestமலேசியா

மைசெஜாத்ரா செயலி நிறுத்தப்படுமா? சில வாரங்களில் தெரியும்

கோலாலம்பூர், மார்ச் 30 – MySejahtera நடமாடும் செயலியை நிறுத்துவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு தெரிந்துவிடும் என சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். நாட்டில் கோவிட் 19 தொற்று பரவலின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை தமது அமைச்சு முதலில் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மலேசிய எல்லைகள் திறக்கப்படவுள்ளன. SOP விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு பின்னரே தொற்று பரவல் குறித்த விவரங்களை நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். அதன் பிறகு மக்கள் Mysejahtera செயலியை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ளலாம் என Khairy Jamaluddin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!