கோலாலம்பூர், ஏப் 14 – மலேசியா என்டெமிக் கால கட்டத்திற்குள் நுழையத் தொடங்கியிருப்பதை அடுத்து, மைசெஜாத்ராவில் வருகையைப் பதிவு செய்யும் நடைமுறையை தொடர்வதா இல்லையா என்பது குறித்து சுகாதார அமைச்சு முடிவு செய்து வருகிறது. அந்த முடிவு இன்னும் ஓரிரு வாரங்களில் தெரிய வருமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.
ஒமிக்ரோன் பாதிப்பின் உச்சத்தை மலேசியா தாண்டி விட்டது. எனவே, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை நாட்டில் கோவிட் பாதிப்பினைப் பார்த்து, மைசெஜாத்ராவின் பயன்பாடு குறித்து முடிவு செய்யப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.