
மம்பாவ், ஆக 19 – தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பு உரிமையைப் பெறுவதில் ஏற்பட்ட தகராற்றில் தமது மைத்துனரை கொலை செய்ததற்காகவும் மற்றொருவருக்கு காயம் விளைவித்தற்காகவும் 34 வயது Taufik Hidayah Abdullah-வுக்கு 30 ஆண்டுகள் சிறை, 17 பிரம்படிகள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொழிற்சாலை ஊழியரான அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இக்குற்றத்தைப் நெகிரி செம்பிலான், மம்பாவில் (Mambau) புரிந்துவிட்டு கெடாவிற்கு தப்பியோடியப் பின் அங்கு கைது செய்யப்பட்டார்.
கொலை குற்றத்திற்காக அவருக்கு 30 ஆண்டுகள் சிறை, 12 பிரம்படிகளும் வழங்கப்பட்ட நிலையில் காயம் விளைவித்த குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகளும் வழங்கப்பட்டன.
இருப்பினும் அந்த இரு தண்டனைகளும் ஒரு சேர கைது செய்யப்பட்ட 2017 -ஆம் ஆண்டு தொடங்கி நிறைவேற்றப்பட நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.