கோலாலம்பூர், பிப் 4 – அமைச்சராக இருந்தபோது, தாம் கையூட்டு பெற்றதாக கூறப்படும் தரப்பை, சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் மீண்டும் கிண்டலாக சாடியிருக்கின்றார்.
புதிதாக அவர் தமது சமூக வலைத்தளத்தில், தாம் பெரோடுவா மைவி காரை ஓட்டும் படத்தையும், Aston Martin காருடன் தமது முகம் ஒட்டப்பட்டு நிற்கும் படத்தையும் பதிவேற்றம் செய்திருக்கின்றார்.
அந்த படத்துடன், தமக்கு 2828 எனும் எண் கொண்ட Vellfire கார் கொடுக்கப்பட்டிருப்பது அவதூறே எனும் பதிவவையும் இட்டுள்ளார்.
மேலும், அந்த Vellfire கார் கல்வியமைச்சின் கீழ் உள்ள EMGS அமைப்புக்கு சொந்தமானதாகும்; அதனை தாம் அமைச்சராக இருந்தபோது பயன்படுத்தியதாகும், அப்பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் அந்த காரை திருப்பி ஒப்படைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதையடுத்து தமது அதிகாரப்பூர்வ கார் மைவி எனவும், தற்போது புதிதாக Aston Martin- னைப் பயன்படுத்துவதாக, தமது பதிவின் மூலமாக கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் மஸ்லி மாலிக்.