Latestமலேசியா

மை கார்ட் உடன் கொண்டு செல்லாவிட்டால் நடவடிக்கை

குவந்தான், ஜன 14 – பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு இனி எங்கு சென்றாலும் தங்களுடன் அடையாளக் கார்டு அல்லது My Kad எடுத்துச் செல்ல வேண்டும். பரிசோதனையின்போது MyKad அல்லது அடையாளக் கார்டு காட்டுவதற்கு தவறினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பதிவுத் துறையின் பகாங் மாநில இயக்குனர் Mohamad Abdullah தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டின் தேசிய பதிவு விதிமுறைக்கு ஏற்ப தங்களை அடையாளம் காட்டும் Mykad காட்டத் தவறினால் அதுவொரு குற்றமாகும். இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள்வரை சிறை மற்றும் 20,000 ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது அவையிரண்டும் விதிக்கப்படலாம் என என முகமட் அப்துல்லா கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!