
ஈப்போ, டிச 2 – மொரிஷியசில் அதிகமான வர்த்தக வாய்ப்புக்கள் இருப்பதால் அதனை மலேசிய இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மொரிசியஸ் தூதர்
Jagdihwar Goburdhun அழைப்பு விடுத்துள்ளார். மொரிசியஸில் வர்த்தகம் செய்வதற்கு ஏராளமாக வாய்ப்புக்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மலேசியாவுக்கும் மொரிசியஸ் நாட்டிற்குமிடையே நல்ல நட்புறவு இருந்துவருவதால் அங்கு மலேசியர்கள் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லையென்பதையும் அவர் தெரிவித்தார்.
ஈப்போ கல்லுமலை ஆலயத்திற்கு இன்று வருகை புரிந்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். மலேசியாவைப் போல் மொரிஷியசிலும் பல இன மக்கள் வசிக்கின்றனர். அங்கு வாழும் மொரிஷியஸ் மக்களுடன் அவர்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர் . இதுதவிர மொரிஷியசின் சுற்றுலா தொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக இருப்பதால் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார். ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் ஜெகதீஸ்வரை ஈப்போ தேவஸ்தானத் தலைவர் வரவேற்றார். பேரா இந்திய வர்த்தக சபையின் தலைவர் ரவி சங்கர், ஈப்போ அருணகிரி நாதர் மன்ற தலைவர் டாக்டர் ஜெயபாலன், ஈப்போ தேவஸ்தான பரிபாலன சபாவின் நிர்வாக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.