Latestமலேசியா

நைய்மாவின் கடப்பிதழை நிரந்தரமாக விடுவிக்கக் கோரும் மனு மீதான விசாரணை அடுத்த மாதம் நீதிபதி செவிமடுப்பார்

கோலாலம்பூர், பிப் 19 – தமது கடப்பிதழை நிரந்தரமாக ஒப்படைக்கும்படி கோரும் Naimah Khalid ட்டின் விண்ணப்பம் குறித்த வாதத் தொகுப்பை அடுத்த மாதம் உயர் நீதிமன்றம் செவிமடுக்கும். இது தொடர்பான வாதத் தொகுப்புக்கள் மார்ச் 4ஆம தேதி செவிமடுக்கப்படும், அதனை தொடர்ந்து மார்ச் 11 ஆம் தேதி பதில் வாதத் தொகுப்பும் மார்ச் 13 ஆம்தேதி வாய்மொழி வாதத் தொகுப்பும் செவிமடுக்கப்படும் என நீதிபதி Ahmad Bache தெரிவித்தார். தமது சொத்து விவரங்களை பிரகடனப்படுத்த தவறியதாக கடந்த மாதம் கொண்டுவருப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் நிதியமைச்சர் Daim Zainuddin மனைவியுமான Naimah மறுத்து விசாரணை கோரியிருந்தார்.

தமக்கு சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் , கோலாலாம்பூர் மற்றும் பினாங்கிலுள்ள பல்வேறு நிலங்கள் மற்றும் இரண்டு வாகனங்களின் உரிமைகள் குறித்து எம்.ஏ.சி.சி க்கு அறிவிக்க தவறியதால் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. ஒரு நபர் உத்தரவாதத்தில் 250,000 ரிங்கிட் ஜாமின் Naimah வுக்கு அனுமதிக்கப்பட்டதோடு அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!