
மொரோக்கோ, செப்டம்பர் 11 – கடந்த வெள்ளிக்கிழமை, மொரோக்கோவை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை, ஈராயிரத்து 122 பேராக அதிகரித்துள்ள வேளை ; ஈராயிரத்து 421 பேர் படுகாயமடைந்தனர்.
அல் ஹவுஸ் (Al Haouz) மாநிலத்தில் மட்டும், இதுவரை மிக அதிகமாக ஆயிரத்து 351 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பின்னர், வலுவான நில அதிர்வுகள் இன்னும் உணரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த நிலநடுக்கத்தால் உஸ்பெகிஸ்தானின், பண்டைய நகரத்திலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வசித்த சுமார் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன.
அதனால், மரண எண்ணிக்கையும் தொடர்ந்து பல மடங்காக அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, இடிபாடுகள் குவிந்து கிடப்பதால், தேடி மீட்கும் பணிகள் பெரும் சவாலாக அமைந்துள்ளதாக, மொரோக்கோ செம்பிறை சங்கம் கூறியுள்ளது.
உள்நாட்டு நேரப்படி, கடந்த வெள்ளிக்கிழமை, இரவு மணி 11.11 வாக்கில், மொரோக்கோவை வலுவான நிலநடுக்கம் உலுக்கியது குறிப்பிடத்தக்கது.