கோலாலம்பூர், பிப் 8 – மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு உதவுவதற்காக அழகு சாதன தொழில் முனைவரான Nur Sajat ட்டை போலீசார் தேடி வருகின்றனர். அடையாளக் கார்டில் தகவலை மாற்றியது தொடர்பில் அவர் தேடப்படுகிறார். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் பிப்ரவரி 22 ஆம்தேதி Nur Sajad சாட்சியாக அழைக்கப்பட்டுள்ளதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்துவரும் Nur Sajad அந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படுகிறார். அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இரு முறை வழக்கு விசாரணைக்கு வரவில்லை.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்11 hours ago