ஜோகூர் பாரு, பிப் 19 – அம்னோ தலைமையிலான கூட்டரசு அரசாங்கம் அறிவித்ததைவிட நாடு மோசமான பொருளாதார பிரச்சனையை எதிர்நோக்கியிருப்தாக பெர்சத்து கட்சியின் தலைவரான Muhyiddin Yassin கூறினார்.
பொருத்தமான நேரத்தில் இது குறித்த விவரங்களை தாம் அம்பலப்படுத்தப்போவதாக அவர் தெரிவித்தார். தேசிய முன்னணி தலைமையிலான நிர்வாகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. மலேசியாவைவிட பொருளாதார மேம்பாட்டில் வியட்னாம் மற்றும் இந்தோனேசியா மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாகவும் முஹிடின் யாசின் சுட்டிக்காட்டினார்.