
சீனா, ஹேனான் மாநிலத்தில், மோசமான மூடுபனியால், 200-ருக்கும் அதிகமான வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. மூடுபனியால் பார்க்கும் தூரம் குறைந்ததை அடுத்து ஏற்பட்ட அந்த விநோதமான விபத்தில், ஒருவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்விபத்தில், கார்களும், லோரிகளையும் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதனால் விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து வெளியேறுவதில் பெரும் சவாலை எதிர்நோக்கியதாக விபத்துக்குள்ளானவர்களில் சிலர் தெரிவித்தனர்.