கோலாலம்பூர், பிப் 6 – கோம்பாக் சாலைக் கட்டண சாவடியில் ஏற்படுத்தப்பட்டிருந்த சாலை சோதனை தடுப்பிலிருந்து தப்பிக்க முயன்று , எதிர்திசையில் சென்ற மோட்டார் சைக்கிளோட்டியை துரத்திச் சென்ற JPJ சாலை போக்குவரத்து துறையின் அதிகாரி உயிரிழந்தார்.
30 வயது மதிக்கத்தக்க அந்த JPJ அதிகாரி செலுத்திய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அப்போது எதிரே வந்த Toyota Vios கார், அவரை மோதுவதிலிருந்து தவிர்க்க முடியாமல் போனதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் இன்று காலை மணி 9.30-க்கு நிகழ்ந்தது.