
கோலாலம்பூர், ஜன – 16 – எட்டு மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று Gua Tempurung கை நோக்கி சென்று கொண்டிருந்தபோது Menora சுரங்கத்திற்கு அருகே வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 255.7 ஆவது கிலோமிட்டரில் கவிழ்ந்தது. இதனால் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை மணி 9.50 அளவில் ஏற்பட்ட விபத்தைச் தொடர்து போக்குவரத்து சுமூகமாக நடைபெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.