
கெடா, யானில், இரு மோட்டார் சைக்கிள்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில், 13 வயது நூர் ஐய்னா எல்சா அப்துல் ஹடி எனும் யுவதி உயிரிழந்த வேளை ; பின்னால் அமர்ந்திருந்த அவரது 11 வயது சகோதரி பலத்த காயங்களுக்கு இலக்கானார்.
அதே சமயம், மற்றொரு மோட்டார் சைக்கிளோட்டியான 41 வயது முஹமட் காதிப் தாஜுடின் எனும் ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை, யான் மாவட்ட போலீஸ் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் ஷானாஸ் அக்தார் ஹஜி உறுதிப்படுத்தினார்.
அவ்விபத்து நேற்றிரவு மணி 9.15 வாக்கில் நிகழ்ந்தது.
இரு சகோதரிகள் பயணித்த மோட்டார் சைக்கிள், சம்பவ இடத்தை அடைந்ததும் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்சாலையில் நுழைந்து அங்கு பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.