Latestமலேசியா

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு ; கெமாமானில், 6 மாணவர்கள் கைது

கெமாமான், மே 8 – திரங்கானு, Kemaman சுற்று வட்டாரப் பகுதியில், மோட்டார் சைக்கிள்களை திருடி வந்ததாக நம்பப்படும், tahfiz சமய பள்ளி மாணவர்கள் ஐவரும், அரசாங்க பள்ளி மாணவன் ஒருவனும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அபியன் கும்பலை சேர்ந்தவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அந்த அறுவரும் கடந்த மூன்று மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை மணி நான்கு வாக்கில் கைதுச் செய்யப்பட்டனர்.

அந்த கைது நடவடிக்கையின் வாயிலாக, இவ்வாண்டு பிப்ரவரி தொடங்கி மே மாதம் வரையில் புகார் செய்யப்பட்ட ஆறு மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்க்களுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளதாக, கெமாமான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின், குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் அசிஸ்டன் சுப்ரிடெண்டன் Sayed Mohd Faizal Sayed Baharom தெரிவித்தார்.

முதலில் சந்தேகிக்கும் வகையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர்களில் இருவர் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் எஞ்சியவர்கள் அடையாள காணப்பட்டதையும் பைசால் உறுதிப்படுத்தினார்.

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள்களை சொந்த தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் அவர்கள் பின்னர், அவற்றை சாலையோரத்தில் கைவிட்டு செல்வதும் வழக்கம் என தெரிய வந்துள்ளது.

எனினும், உபரிப் பாகங்களுக்காக அவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணைக்கு உதவும் பொருட்டு அவர்கள் அனைவரும் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!