
தலைநகர், சூரியா கே.எல்.சி.சி முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13 மோட்டார் சைக்கிள்களுக்கும், நான்கு மின் ஸ்கூட்டர்களுக்கும் எரியூட்டிய குற்றச்சாட்டை மறுத்து ஆடவன் ஒருவன் விசாரணை கோரினான்.
உணவு விநியோகிப்பாளரான 34 வயது அஸ்ரில் கமருஜாமான், இம்மாதம் 13-ஆம் தேதி, மாலை மணி 3.30 வாக்கில், வேண்டுமென்றே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு எரியூட்டி சதிநாச வேலையில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 14 வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாத தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் அஸ்ரில் இன்று விடுவிக்கப்பட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை மே மாதம் 22-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.