
கோலாலம்பூர், ஜூன் 9 – தனது மோட்டார்சைக்கிளில் அபாயகரமான சகாசத்தில் ஈடுபட்டபோது உணவு விநியோகிப்பாளர் ஒருவர் கேமராவில் பதிவானதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். ஜூன் 7 ஆம் தேதி வெளியான வீடியோவில் அந்த சாகச காட்சி பதிவாகியிருப்பதாக அம்பாங் ஜெயா OCPD துணை கமிஷனர் Mohamad farouk Eshak தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளின் இருக்கையின் மேலே இருந்த பெட்டியின் மேல் அமர்ந்திருந்தவாறு சகாசகத்தில் ஈடுபட்ட 45 வயதுடைய அந்த நபர் நேற்று காலை 10.30 மணியளவில் kampung Cheras Baru வில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாங் ஜெயா போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதாக Mohamad Farouk கூறினார்.