
கோத்தா திங்கி, ஏப் 26 – 75 வயது முதியவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்ததில் கடுமையான காயத்திற்குள்ளானதால் மரணம் அடைந்தார். Taman Aman னைச் சேர்ந்த அந்த ஆடவர் இன்று காலை மணி 10.15 அளவில் அருகேயுள்ள நகருக்கு சென்றபோது விபத்துக்குள்ளானதாக கோத்தா திங்கி ஓ.சி.பி.டி Hussein Zamora தெரிவித்தார். சாலை சந்திப்பை நெருங்கியபோது மோட்டார்சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்தால் அவர் விபத்துக்குள்ளாகி சாலையோரத்திலுள்ள கால்வாயில் விழுந்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் 2 மீட்டர் ஆழத்திலுள்ள கால்வாயிலிருந்து அவரது உடலை மீட்டனர்.