
கோலாலம்பூர், ஜன 18- அம்பாங் ஜெயா வட்டாரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் நிறுத்திவைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி அதன் பாகங்களை விற்பனை செய்யும் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்தனர். இக்கும்பலைச் சேர்ந்த ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் என அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohamad Farouk தெரிவித்துள்ளார்.
தாமான் மூடாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணவில்லையென புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்டதாக நம்பப்படும் நான்கு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அதன் உபரிப் பாகம் ஒன்றும் அக்கும்பலிடமிருந்து மீட்கப்பட்டதாக முகமட் பாருக் கூறினார். வங்சா மாஜூ, ஸ்தாப்பாக் ,ஜிஞ்சாங் மற்றும் அம்பாங்கில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட சம்பவங்களில் அக்கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.