
சபா பெர்னாம் , ஜூலை 14 – நேற்று நண்பகல் 1.30 மணியளவில் , ஜாலான் சுப்பார் எனும் சாலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் ஓட்டி சென்ற மோட்டார் வண்டி மின்கம்பத்தில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
59 வயதுடைய அந்த ஆசிரியர் பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி அவரது தலையில் பலமான காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தெங்கு அம்புவான் ஜெமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.