பேராக், அக்டோபர் 2 – பேராக் மாநில ம.இ.காவின் செயல்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க, இன்று அம்மாநில மந்திரி பெசார், டத்தோ ஸ்ரீ ஹாஜி சாராணி முகமட்டை, மரியாதை நிமித்தம் சந்தித்தார், பேராக் மாநில ம.இ.கா தலைவர் டான் ஸ்ரீ எம். இராமசாமி.
இச்சந்திப்பில் ம.இ.காவின் செயல் திட்டங்கள் மட்டுமின்றி, பேராக் மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் மந்திரி பெசாரின் கவனத்திற்கு ராமசாமி கொண்டுச் சென்றுள்ளார்.
24 தொகுதிகளில் 600 கிளைகளைக் கொண்ட பேராக் ம.இ.கா-வை வலுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தாம் பதவியேற்று கடந்த 50 நாட்களில் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக ராமசாமி தெரிவித்தார்.
தேசிய முன்னணி, தோழமை உணர்வுடன் மாநில மஇகாவின் செயல் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் என சாராணி உறுதியளித்திருக்கிறார்.