சுங்கை சிப்புட், ஆக 11 – ம.இ.காவின் பொருளாளர் டான் ஶ்ரீ M. ராமசாமி பேரா ம.இ.காவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கை சிப்புட்டில் பேராக் மாநில ம.இ.கா மாநாட்டை தொடக்கி வைத்த போது தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இதனை அறிவித்ததோடு முன்னாள் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
ராமசாமியின் இந்த நியமனம் கட்சி உறுப்பினர்களின் குறிப்பாக இளைஞர்களின் ஆதரவை பெறும் என தாம் நம்புவதாக ம.இ.கவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ M . சரவணன் தெரிவித்திருக்கிறார் கூறினார். அதே வேளையில் முன்னாள் மாநிலத் தலைவர் டத்தோ வி.இளங்கோவுக்கு மத்திய நிலையில் முக்கிய கடமை இருப்பதாக மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியளர்களிடம் அவர் கூறினார்.
இதனிடையே கட்சியின் தேசிய தலைவரிடமிருந்து தமது நியமன கடிதத்தை பெற்றுக் கொண்ட ராமசாமி 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே டத்தோஸ்ரீ பழனிவேல் அவர்களால் தாம் பேரா ம.இ.கா தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் அந்த வகையில் மீண்டும் அம்மாநில தலைமைத்துவத்தை ஏற்க தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பு வழங்கிய தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் , துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
நான் பேராக் சிலிம் ரீவரில் பிறந்து வளர்ந்தவன் என்னும் அடிப்படையில் மாநிலத்தை பற்றியும் மக்களின் தேவைகள் குறித்தும் நன்கு அறிந்துள்ளதாக வணக்கம் மலேசியாவிடம் ராமசாமி தெரிவித்தார். பேரா ம.இ.கா உறுப்பினர்கள் மற்றும் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் விவரித்தார்.